காணாமல் ஆக்கப்படுதலின் வலியை பேசும் ‘மூச்சிழுக்கும் ஆத்மா’ காணொளிப்பேழை!

0
606
Moochizhukum Athmaa Film Posterஇலங்கையில் ‘காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவங்கள், குடும்ப அலகு முதல் சமுக கட்டமைப்பு வரை அனைத்தையும் சிதைத்துச்சின்னாபின்னமாக்கியுள்ளது. மிகவும் மோசமான இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பொருளாதாரம், தொழில், கல்வி, சுகாதாரம், சமுகநிலை எல்லாவற்றிலும் கடும் தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளது.
‘ஆள்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்’ சம்பவங்கள், தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசிய பிரச்சினையாகும். இந்த தேசிய பெருந்துயரை – வலியை ஈழத்தில் முதல் முறையாக பேசுகிறது ‘மூச்சிழுக்கும் ஆத்மா’ காணொளிப்படைப்பு!
இசையமைப்பாளர் சன்ஷைன் டி ஹர்சி யின் நெஞ்சைப்பிசையும் இசையில், தாயக கவிஞர் அ.ஈழம் சேகுவேராவின் ஆத்மார்ந்த வரிகளுக்கு, தென்னிந்திய திரைப்பட பாடகி ஜெகனி உணர்வூட்டியிருக்கின்றார்.
இளம் திரைப்பட இயக்குநர் புவிகரனின் இயக்கத்தில், அவருடன் கலைஞர் மாணிக்கம் ஜெகனும், பிரியா செல்வராஜாவும் இணைந்து வலி கூட்டியுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 அன்று, ‘மூச்சிழுக்கும் ஆத்மா’ காணொளிப்பேழை வெளிவரவுள்ளமை சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here