கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் பரிதாபகரமாக சுழியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எனினும் இன்றைய தினமே குறித்த இளைஞனின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்மை குறிப்பிடத்தக்கது .