மட்டக்களப்பில் ஆணின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்பு!

0
125

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில், இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கடந்த 04ஆம் திகதி மீட்டதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில், மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கின.

காவல்துறையினருக்கு இதுபற்றித் தெரிவிக்கப்பட்டு தடயவியல் பிரிவினரும் அழைக்கப்பட்டனர். விசாரணையில் 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஓடு இதுவென பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்குச் சென்று மண்டை ஓட்டைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகள் என்பன மட்டு, போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here