.300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் 14,000 கோடி தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்தது.
கடந்த 1708 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அப்போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியை பத்திரமாக பாதுகாத்து எடுத்து சென்றது.
ஆனால் அக்கப்பலை கைப்பற்றி தன் வசமாக்க இங்கிலாந்து போரிட்டது, இதில் ஸ்பெயின் கப்பல் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டுவீசி மூழ்கடிக்கப்பட்டது.
அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 1980 ஆம் ஆண்டுகளில் சிதைந்த கப்பல் மூழ்கி கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கப்பலில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதை கொலம்பியா நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர், அதில் இருக்கும் புதையலின் மதிப்பு 14,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 300 ஆண்டு மர்மம் விலகி விட்டதாக கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவல் சான் டோஸ் அறிவித்துள்ளார்