திருகோணமலை கடற்பரப்பில் சடலங்கள் மிதப்பதாக தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இரண்டு டோரா படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு படகை அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலையிலிருந்து 20 கடல் மைல் தூரத்தில் 6 சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை 05 மணிதொடக்கம் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதால் தேடுதல் நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.