மகிந்த பாதுகாப்பிற்கு வழங்கப்பட்ட 500 இராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ள மைத்திரி உத்தரவு!

0
532

Mahinda_Rajapaksaமுன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பிற்கு என வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தவாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையொன்றை ஆராய்நத பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதியின் பாதூப்பிற்கு என 500 இராணுவத்தினரும் 130பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ளது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என படைவீரர்கள் ஓதுக்கப்பட்டுள்ளமை குறித்து எந்தவித ஆவணங்களும் இராணுவத்தினரிடமும் காணப்படவில்லை என இராணுதலையக வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பின் அளவிற்கே மகிந்த ராஜபக்சவிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் பின்னரே ஏனைய தேவைகள் குறித்து ஆராயவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் வலுவான 500 இராணுவப் பாதுகாப்பை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொண்டார்:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வலுவான 500 இராணுவப் பாதுகாப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஜஸவிற்கு 130 காவல்துறைய உத்தியோகத்தர்களினதும், 500 இராணுவத்தினரதும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகம் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சோ அல்லது இராணுவமோ அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிடுகின்றது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான செலவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைகளை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் ஒரேவிதமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here