
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.