
தமிழினப்படுகொலை உச்சநாள் மே 18 இன் 15 ஆவது ஆண்டின் நினைவாக பிரான்சு மண்ணில் நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியும், நினைவேந்தல் நிகழ்வும் எதிர்வரும் மே 18 சனிக்கிழமை மதியம் 14.00 மணிக்கு றீபப்ளிக் என்னும் இடத்தில் புறப்பட்டு பஸ்ரில் என்ற இடத்தில் நிறைவுபெற்று நினைவேந்தல், உரைகள் நிகழ்வுகளோடு நடைபெறவுள்ளன.

குறித்த நினைவேந்தல் தொடர்பான சுவர் ஒட்டிகள் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழ் வர்த்தக நிலையங்களிலும், பாரிசின் புறநகர் பகுதி தமிழ் வர்த்தக நிலையங்களிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.






