
புங்குடுதீவு தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலய புனரமைப்பு வேலைகளுக்காக கிடங்குவெட்டிய போது மனித எலும்பு எச்சங்கள் சில தென்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதியின் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் நடைபெற்றது.

அகழ்வுப்பணிகளின் போது பெண்ணொருவரினது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டின் எச்சங்கள் மீட்க்கபட்ட நிலையில் அகழ்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளது.

