எமது மக்களின் படுகொலைக்கான பொறுப்பை சம்பந்தனும் ஏற்க வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

0
440

kajendran
முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சம்பந்தன் – அதிகாரப்பகிர்வை ஏற்க முன்வந்து ராஜபக்ச அரசுடன் துணை நின்றமையே காரணம் மாறாக 2005 தேர்தல் பகிஸ்கரிப்பு அல்ல எமது மக்களின் படுகொலைக்கான பொறுப்பை அவரும் ஏற்க வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித்தீர்வை வலியுறுத்தியபோது தமிழ் மக்களது ஆணையை பெற்ற கூட்டமைப்பின் தலைவராக இருந்துகொண்டு அதிகாரப்பகிர்வு அடிப்படையில் சமஸ்டித்தீர்வை ஏற்க சம்பந்தன் முன்வந்திருந்தார். அதுவே ஸ்ரீலங்கா அரசு புலிகளை குழப்பவாதிகளாக சர்வதேச ரீதியில் காட்டி அவர்களை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவை திரட்டிக் கொடுத்தது.
அதிகாரப்பகிர்வு அடிப்படையில் சமஸ்டித்தீர்வை ஏற்க தமிழர்கள்(சம்பந்தன்) தயார் அவ்வாறான ஒரு தீர்வை வழங்க தாம் தயார் என்று சிங்களத்தரப்பும் கூறிவந்த நிலையில்
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்கள மக்கள் வழங்கத் தயாராக உள்ள நடைமுறைச் சாத்தியமாக உள்ள நிலையில் சிங்கள மக்கள் கொடுக்க விரும்பாத சுயநிர்ணய உரிமையை பிரபாகரனும் புலிகளும் கோருவது வீண் விதண்டாவாதம் சமாதானத் தீர்வில் அவர்களுக்கு நட்டம் இல்லை அவர்கள் போர் வெறி கொண்டு நிற்கின்றனர். நாட்டைப் பிரிப்பதே அவர்களது நோக்கம் என்ற குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா அரசு புலிகள் மீது சுமத்தி அவர்களை சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதற்கு சம்பந்தன் துணை நின்றார்.
புலிகள் அழிக்கப்படாதவரை இந்தத்தீவில் நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்கு இடமில்லை என்வே புலிகளை அழித்து இந்தத்தீவில் சமஸ்டித்தீர்வை உருவாக்கப்போகின்றோம் என்று கூறியே புலிகள் மீதான போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது.
சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் சமஸ்டித்தீர்வை ஏற்க முன்வந்ததன் மூலம் அத்தீர்வை நடைமுறைப்படுத்த புலிகளை அழிக்க வேண்டும் என்ற போர்வையில் ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு யுத்த்ததிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கைஅரசு திரட்டுவதற்கு சம்பந்தன் எடுத்திருந்த நிலைப்பாடே முழுமையாக உதவியது.
இந்த யுத்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்கள் வாகரையிலும் முள்ளிவாக்காலிலும் படுகொலை செய்யப்பட்டனர். அப் படுகொலைக்கு சம்பந்தன் பொறுப்பேற்க வேண்டும். தான் செய்த வரலாற்றுத் தவறை மூடி மறைப்பதற்காகவே விடுதலைப் புலிகள் ஈவிரக்கமில்லாத கடும்போக்கு அமைப்பு என்று கூறியுள்ளார்.சம்பந்தன் கூறிய இக் கருத்தை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விடுதலைப் பலிகள் தரப்பில் இருக்கக் கூடிய நியாயங்களை எஞ்சியிருக்கும் முன்னாள் போராளிகள் சுதந்திரமாக முன்வைக்க முடியா நிலையை தொடர்ந்து பேணுவதற்கு அரசுக்கு முழுமையாக முண்டு கொணடுத்தவாறு ஒரு தரப்பு நியாயத்திற்கு எந்தவித இடமும் அளிக்காமல் இக்குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
மேலும் 2005ல் விடுதலைப் புலிகள் எடுத்த பகிஸ்கரிப்புக் கோரிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவதும் இன அழிப்புக்கு தான் துணை நின்றமையே காணரம் என்ற உண்மையை மறைத்து புலிகள் பகிஸ்கரிததமையினால் சர்வதேச சமூகம் கோபம் கொண்டது ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார் அதுவே புலிகளின் அழிவுக்கு காரணம் என்ற மாயத்தோற்றத்தை உண்மை என மக்களை நம்பவைத்து தனது வரலாற்றுத் தவறை மறைப்பதே நோக்கமாகும். இச் செயல் மிகவும் நயவஞ்சகத்தனமானது. மக்கள் இந்த உண்மையை உணராதவரை அவலங்கள் தொடரும் விடுதலை கானல் நீர் போன்று தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here