கிளிநொச்சியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு!

0
182
01-1422773378-electrocuted-600[1]கிளிநொச்சி, வட்டக்கச்சி, தச்சன் வீதியிலுள்ள மரப்பட்டறை ஒன்றில் இன்று மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் அரியும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here