வெள்ளப் பாதிப்பை நேரில் பார்வையிட்டார் மோடி : 1000 கோடி நிவாரணம் அறிவிப்பு!

0
152

.03-1449144345-modi-jaya93-600வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரக்கோணத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து அடையாறு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் ரூ.939.53 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது வெள்ள சேதம் அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி உடனடியாக வழங்கப்படும்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here