ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று (28.04.2024 ) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் சதீஸ்வரன் நிதுசா அவர்கள் ஏற்றிவைக்க
ஆனந்தபுர நாயகர்களுக்கான ஈகைச்சுடரினை 01.02.1998, கிளிநோச்சியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை வேணி அவர்களின் சகோதரி , 25.03.2009, ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த லெப் கானக்கதிர் அவர்களின் தாயார், 2009 ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த மேஜர் கிருபன் அவர்களின் சகோதரி, 11.06.1990 , காங்கேசன்துறையில் வீரச்சாவடைந்த மேஜர் விவேகன் அவர்களின் சகோதரி, 14.07.1995, சண்டிலிப்பாய்- அளவெட்டிப் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் அருந்ததி அவர்களின் சகோதரி, 14.05.1985, வில்பத்து காட்டுப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப். பிரசன்னா அவர்களின் சகோதரர் ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனம், ஆனந்தபுர நாயகர்கள் நினைவுசுமந்த கவிதை, பாடல், பேச்சு மற்றும் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் எழுச்சி கானங்கள் என்பன உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தன.
நினைவுரையினை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் துணைப் பொறுப்பாளர் திரு.அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)