யாழில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல்!

0
138

சிறிலங்கா ஒட்டுக்குழுவினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நினைவேந்தப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காகத் தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு  அஞ்சலி செலுத்தினர். 

ஊடகவியலாளரான மாமனிதர் தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்தபோது, கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் வைத்து உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here