மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் 30 வருடங்களுக்கு இந்தியா வசம்!

0
32

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (25) வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 05 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கும் ரஷ்யாவின் Airports of Regions Management Company இற்கோ அல்லது அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here