
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அக வணக்கமும் செலுத்தப்பட்டது. தந்தை செல்வாவின் சிலைக்கு ஒளியூட்டும் முகமாக, சூரிய மின்கலத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கத்தின் ஏற்பாட்டில் பொருத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும்பங்கேற்றிருந்தனர்.