
பிரான்சில்; விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோருகின்றன.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரான்ஸ் விமான சேவைகள் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பிரான்ஸின் முக்கியமான 2 விமான நிலையத்தில் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 70 சதவீத விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப்புறக்கணி;ப்பு தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளதுடன் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட இலட்சக்கணக்கானவர்கள் பிரான்சுக்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்..