தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்36 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான பொண்டி பிரதேசத்தில் கடந்த 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பால், மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரை பொண்டி தமிழ்ச்சங்கத் தலைவி துபாஷினி பிரமதேவன் (துளசி) அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர், தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மாவின் திருவுருவப்படத்திற்கான சுடர், மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கான சுடர்கள் நாட்டுப்பற்றாளர் சிவராசா, நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி, நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் சந்தியோகு, நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின், நாட்டுப்பற்றாளர்அகிலன், நாட்டுப்பற்றாளர் சாதாவேல்மாறன் ஆகியோரின் உறவுகள் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களின் சுடர், மலர் வணக்கம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள், பாடகர்கள், விடுதலைப்பாடல்களையும், எழுச்சிப்பாடல்களையும் கரோக்கி இசைமூலம் வழங்கினர். மாவீரர் பாடல்களுக்கான நடனத்தை ஒள்னே சுபுவா தமிழ்ச்சோலை,,திறான்சி தமிழ்ச்சோலை, மாணவர்கள் வழங்கினர்.
தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு கண்டது.