யாழ். குடாநாட்டில் மீண்டும் ஆரம்பித்திருக்கும் கனமழை!

0
170

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் இடையிடையே மழையுடனான காலநிலை நீடித்து வந்த நிலையில் இடையிடையே மேகம் இருண்டு கடும் மழையும் பொழிந்து கொண்டிருக்கின்றது .
நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இரவு வேளையிலும் மழையுடனான காலநிலை காணப்பட்டிருந்தது .
குடாநாட்டில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாகக் கொட்டித் தீர்த்த அடைமழை ஓய்ந்து இரு வாரங்கள் கழிந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மக்களும் அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டெழாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் வளிமண்டலத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கில் கனமழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
malai 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here