கார்த்திகைப் பூ இல்ல அலங்காரம் – அதிபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை! 

0
118

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ வடிவத்தில் இல்ல அலங்கரிப்பு செய்யப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையே பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here