மாநகர தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கான நன்றியும், பாராட்டு நிகழ்வும். பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லூபுசே மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கமானது அம்மாநகர முதல்வருடன் ஓர் சந்திப்பை ஏற்பாடுசெய்திருந்தது.
அந்நிகழ்வானது லூபுசே தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் அப்பிரதேச மக்கள் இளையவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், ஏனைய தமிழ் சங்கங்களின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநகரமுதல்வர், மற்றும் துணைமுதல்வர், 93 மாவட்ட மற்றும் லாக்கூர்நோவ் மாநகர ஆலோசகர். சுகுணா அவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களை மரியாதையின் நிமிர்த்தம் தமிழ்ச்சங்கத்தால், தமிழர் கட்டமைப்பால் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது. முதல்வர் இங்கு வாழும் தமிழ் மக்கள் நடைபெற்ற மாநகரசபைத் தேர்த்தலில் வாக்களித்தமைக்கும் நன்றி தெரிவித்திருந்ததுடன், ஆனாலும் இங்கு வாழும் வெளிநாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தமிழ்மக்களுக்கும் சகல தேவையான வழிகளிலும் தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் தெரிவித்திருந்தார். அவருக்கு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திரு. ரூபன் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் தொடர்ந்தும் அரசியல், மற்றும் சகலவழிகளிலும் நாமும் தங்களுடன் பயணிப்போம் என்றும் தெரிவித்திருந்தார். சிற்றுண்டிகள், குளிர்பானத்துடன் இச்சந்திப்பு நிகழ்வு நிறைவு பெற்றது.