நெதர்லாந்து இரவுவிடுதியில் பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையில் காவல்துறையினர்!

0
31

நெதர்லாந்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஈடே (Ede) பிரபலமான இரவு விடுதியில் பணயக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Ede இல் உள்ள கஃபே பெட்டிகோட் (Café Petticoat) வளாகத்திற்குள் ஒருவர் அதிகாலையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் அந்த இடத்திற்கு நுழைந்து மூன்று பயணக் கைதிகளையும் விடுவித்தனர். இன்னும் நிலைமை முடிவுக்க வரவில்லை.

இச்சம்பவத்தில் எதுவித பயங்கரவாத நோக்கங்களும் இல்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 150 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் நகர மையம் மூடப்பட்டுள்ளது.

இரவு விடுதியைச் சுற்றியிருந்த சுற்றிவளைப்பை அகற்றியதாகவும், சம்பவ இடத்தில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். Ede செல்லும் மற்றும் புறப்படும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதாக தொடருந்து இயகுநர்கள் தெரிவித்தனர்.

Ede என்பது ஆம்ஸ்டர்டாமுக்கு தென்கிழக்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 120,000 மக்கள் வசிக்கும் ஒரு பெரிய நகரமாகும், இது அர்ன்ஹெம் மற்றும் அதன் கிழக்கே ஜெர்மனியின் எல்லை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here