தொர்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு விழா தமிழ்ச்சோலைக் குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர்களின் பறை இசையுடன் விருந்தினர்கள் வரவேற்று அழைக்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சோலை பண் மாணவர்கள், ஆசிரியர்களால் பாடப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் இடம் பெற்றன. மாணவக்குழந்தைகளில் ஆக்கங்கள் நடனம், கோலாட்டம், மயில் நடனம், கிராமிய நடனம், தாயகப்பாடல்கள், எழுச்சிப்பாடல்கள், காவடி நடனம், நாடகம், பரதநடனம், கீர்த்தனைப்பாடலகள், வயலின் இசை என பல நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தாநகர முதல்வர் உட்பட 77 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டு உரைகளையும் ஆற்றியிருந்தனர். தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
பல தமிழ் அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. 25 ஆவது ஆண்டு நிறைவு பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தலைவர் உரையாற்றியதோடு சங்கத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் பங்கெடுத்தவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். தொர்சி வாழ் கலைஞர்களின் பாடலும் இந்நிகழ்வில் பங்கெடுத்ததும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு