பிரான்சில் எழுச்சியாக நடைபெற்ற பவளவிழா24-03-2024!

0
122

தமிழீழ தேசத்தின் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் 75 ஆவது ஆண்டு பவளவிழா பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி மாநகரத்தில் 24.03.2024 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பி.பகல் 3.30 மணிக்கு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள், மாவீரர்கள் பொதுப்படத்திற்கு ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து மலர்வணக்கமும், அகவணக்கமும் செய்யப்பட்டது.

தொடர்ந்து அரங்கில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனை  பிரான்சின் மூத்த கலைஞர்கள், பொண்டி மாநகர முதல்வர், துணை முதல்வர், கல்வி மேம்பாட்டுப்பேரவைப் பொறுப்பாளர், கலைபண்பாட்டுக்கழக துணைப் பொறுப்பாளர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர், புதுவை இரத்தினதுரை அவர்களுடன் இருந்தவர்கள், தற்போது ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த மூத்த கலைஞர்கள், பிரான்சு தமிழர் வர்த்தக சங்க பிரமுகர்கள் எற்றி வைத்தனர். தொடர்ந்து இசைவாணர் கண்ணன் அவர்களால் இசையமைக்கப்பட பாடலுக்கு வரவேற்பு நடனம் மாணவ மாணவிகளால் வழங்கப்பட்டது. அவர்களை தமிழர் வர்த்தக சங்கப் பொருளாளர் திரு. மதிதரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. பாலசுந்தரம், வெளியீட்டுப்பிரிவு சார்பாக திருமதி பிறேமளா  ஆகியோரால் பவளவிழா நினைவு படம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். வரவேற்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளரால் வழங்கப்பட்டது.  நிதர்சனம் பிரிவால் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் பற்றிய விவரணம் காட்சிப்படுத்தப்பட்டது. அவர் தாயகத்தில் கலைபண்பாட்டுக் கழகத்தால் செய்த பணிகள், கலையால் செய்த பரப்புரைகள், போராளிகளுடன், இசையமைப்பாளர்களுடன் செய்த பணிகள் யாவும் திரட்டப்பட்டு அடுத்து வரும் தலைமுறைக்கு ஓர் ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டது. அதனை உருவாக்க உறுதுணையாகவிருந்த நிதர்சனம் பொறுப்பாளர் லெப். கேணல். சேரலாதன் அவர்களின் துணைவி அமலா அவர்கள், மற்றும் புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழ்அன்பன் அவர்களின் துணைவியார் நந்தாகினி, மற்றும் போராளிக்கலைஞர்கள் பூமா, அமலா ஆகியோர்  போராளிக்கலைஞர் மிருதங்க வித்துவான் திரு. கண்ணதாசன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டது. அடுத்து 433 பக்கங்கள் கொண்ட பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப்புத்தகப் பணியில் பணியாற்றிவர்களின் ஒருவரான பிரித்தானியாவில் இருந்து வந்த இன்பம் அவர்கள் இப்புத்தகப் பணி பற்றியும், அதில் இருந்த விடயங்கள் பற்றியும் உரையாற்றினார். புத்தகத்தை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப் பொறுப்பாளர் திரு. ஜெகன் வெளியிட்டு வைக்க இப்புத்தகத்திலும், பவளவிழாவின் பணிகளின் அதிகம் உழைத்த பிரான்சின் கலைபண்பாட்டுக்கழகத்தின் மூத்த கலைஞர் திரு. பரா அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அவருடன் தாயகக் கலைஞர் திரு. தனபால் அவர்களும் மதிப்பளிக்கப்பட்டார்.  பவளவிழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆதரவாளர்கள், புதுவை இரத்தினதுரை அவர்களின் நண்பர்கள், உறவுகள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து புதுவையின் புதுமை என்ற விரலி ( ருளுP )10 பாடல்கள் அடங்கியது ) வெளியிட்டு வைக்கப்பட்டது. வெளியீட்டு உரையை பாடகர், இசையமைப்பாளர் இரா செங்கதிர் அவர்கள் ஆற்றியதுடன் இவை தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் அது காலத்தின் அவசியம் என்பதையும் கூறியுமிருந்தார். இவ் இறுவெட்டில் இசையமைத்தவர்கள், பாடியவர்கள், பாடல்களை எழுதியவர்கள், மேடைக்கு அழைத்து  புதுவை இரத்தினதுரை அவர்களின் நினைவாக மதிப்பளிக்கப்பட்டனர். இவ் மதிப்பளித்தலை பிரான்சின் கலைபண்பாட்டுக்கழகத்தின் மூத்த கலைஞர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆண்டுதோறும் சங்கொலி நிகழ்வில் வழங்கி மதிப்பளிக்கும் ‘விடுதலையின் வேர்கள்’ என்ற உயர் மதிப்புக்குரிய மதிப்பளித்தலைப் பெற்றுக் கொண்ட திரு. பரா அவர்கள் கலைஞர்களுக்கு வழங்கி மதிப்பளித்தலை செய்து வைத்தார். மற்றொரு பிரதியை லெப். கேணல். சேரலாதன் அவர்களின் துணைவியார் அவர்களுக்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக துணைப் பொறுப்பாளர் திரு. செல்வராசா அவர்கள் வழங்கியிருந்தார். இவர்களுடன் ஈழத்திரைப்படச்சங்கம் பிரான்சு தலைவர், பொறுப்பாளர் ஜெனா, மற்றும் விக்ரம் ஆகிய செயற்பாட்டாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். 

தொடர்ந்து புதுவை இரத்தினதுரை அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்தபோதும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு அதில் அவருடன் பயணித்ததோடு அவ் நிகழ்வுகளில் அறிவிப்பாளனாக பணியாற்றிய திரு. எஸ். கே. ராஜன் அவர்கள் அவர்பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து எதிர்வரும் 14.04.2024 நநடயஅpடயல ஈழக்காண்பியில் வெளிவரவுள்ளதும் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஈழத்தையும், தாய்தேசத்தையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஊழி என்னும் திரைப்படம் பற்றியதொரு விளக்கத்தை திரு. யஸ்ரின் அவர்கள் வழங்கியிருந்தார்.

கனடா தேசத்திலிருந்து வருகை தந்த திரு. கதிர் செல்வக்குமார் அவர்கள் சிறப்புரையையும், அந்தநாள் நினைவுப்பகிர்வுகளையும் வழங்கியிருந்தார். புதுவை அண்ணருடன் தமிழகத்தில் விடுதலைக்காக கலைரீதியாக செய்யப்பட்ட பணிகள், பாடல்கள், இசைதட்டு உருவாக்கம் பற்றிய பல தகவல்களை பரிமாறிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ தேச விடுதலைக்காக அவர் எழுதிய பல நூறு பாடல்கள் இருந்த போதும் அதில் 14 பாடல்களை தாயகத்தில் கலைபண்பாட்டுக்கழகத்தின் கலைஞர்களாக புதுவை அவர்களுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் இசைப்பிரியன், முகிலரசன், இராசெங்கதிர், வாத்தியக் கலைஞர்கள், கண்ணதாசன், சதா வேல் மாறன், நிதர்சன் மற்றும் பிரான்சு கலைபண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களும் இணைந்து வழங்கியிருந்தனர். 

இந்நிகழ்வில் தாயகத்தில் தாம் வாழ்ந்த காலத்தில் கலையாலும், எழுத்தாலும், பல்வேறு வழிகளில் பணியாற்றியவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களும் இன்றைய நாள் நாம் தாயகத்தில் நிற்கின்றதோர் உணர்வையும், உவகையையும் ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தனர். எமது விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய அர்ப்பணிப்புகள், தியாகங்கள், செய்யப்பட்டிருக்கின்றது அது நாளைய எமது தலைமுறைக்கு இன்று சொல்லப்பட வேண்டும். எடுத்துச் சொல்லப்பட வேண்டும்  இது இக்காலத்தில் வாழுகின்ற எம் தலைமுறையின் மிகப்பெரும் கடமை என்றும,; அதனை உரிய கட்டமைப்பின் ஊடாக, அன்று தாயகம் யாரை கைகாட்டிவிட்டதோ அவர்கள் தான் செய்ய வேண்டும் என்றும், அக்;கட்டமைப்புகளும் இவர்கள் அனைவரையும் இதில் இணைக்க வேண்டும். இருப்பவர்களும் இதில் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் தமது ஆழமன கருத்துக்களை கூறியிருந்தனர். தாய் மண்விடுதலையையும், அதன் தலைவனையும் தாம் எவ்வாறு நேசித்தோம் பணியாற்றினோம் என்று மனம் வெதும்பியதோடு அந்த தலைவனின் கனவை நனவாக்க நாம் ஒன்றாக பயணிப்போம் என்று கூறியிருந்தனர்.

இதே வேளை இன்றைய நிகழ்விலும் கடந்த சில காலங்களாக எல்லா நாடுகளிலும், இடங்களிலும் நடைபெறுகின்றதோர் விடயமான நிகழ்வுகளுக்கு வந்துவிட்டு சிறிநேரத்தின் பின் கூட்டம் கூட்டமாக நின்று பேசுவதும், அதனால் வெளியே பெரும் சனக்கூட்டமும், மண்டபத்தில் இருக்கைகள் வெறுமனே இருப்பது போன்றதொரு தோற்பாட்டையும் ஏற்படுத்திவருகின்றது. தமிழீழ தேசியக்கவிஞருக்கு பவளவிழா எடுக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலர் வந்திருந்த போதும் தனிச்சந்திப்பு என்கின்ற நிலையால் மண்டபத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது போன்று காட்சியளித்தமையும், இந்த நிகழ்வானது நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமையால் பலநாடுகளில் இருந்து பல தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர் இதனையும் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது. 600 இருக்கைகள் கொண்ட மண்டபம் சிலமணிநேரம் இருக்கைகள் போதாமல் போயிருந்தது  திட்டமிட்டதின் படி முடிக்க வேண்டிய நிகழ்வு ஒரு மணிநேரம் மேலதிகமாக தேவைப்பட்டிருந்தது. நிகழ்வுகள் யாவும் பவளவிழாவுக்கு ஏற்றால் போல் பவளம் நிறைந்த நாளாகவே இன்றைய நாள் இருந்திருந்தது. இரவு 9.00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைத்து தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்  உறுதியுடன் உரக்க எழுப்பி நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here