ரஷ்யாவில் நேற்றையதினம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாகவும் படுகாயமடைந்தோர் 100 எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஆப்கானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பு 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனிடையே, மொஸ்கோ மீதான தாக்குதல் தொடர்பில் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் புடின்இந்த தாக்குதல் தொடர்பில் நேரடியாக உரையாற்றவில்லை, ஆனால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.