மறைந்த சாந்தனின் இறுதிக் கிரிகைகள், அவரது இல்லத்தில் நாளை(4) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகுமென குடும்பத்தவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் புகழுட்ல் சிவில் அமைப்புக்களால் இன்றிரவு குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இறுதிக் கிரிகைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் பிறந்த பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.தற்போது வித்துடல் வைக்கப்பட்டுள்ள வீடு சாந்தனின் சகோதரியார் இல்லமாகும்.
இதேவேளை வல்வைட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் புகழுடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் அருகாகவுள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் தற்போது இலங்கை படைகளால் ஆக்கிரமிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.