பிரான்சின் பாரிசுக்கு அண்மையில் மிக எழுச்சியாக இடம்பெற்ற 2015 தேசிய மாவீரர் நாள்!

0
1054

பிரான்சின் Saint – Germain – en – laye – பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2015 நிகழ்வுகள் 27.11.2015 வெள்ளிக்கிழமை அன்று மிக எழுச்சிகரமாக நடைபெற்றிருந்தன.

IF
IF

IF
IF
IF
IF
IF
IF
IF
IF[/cஇதேவேளை வழமைபோன்று பாரிஸ் பன்தன் பகுதியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் நடுகல்கள் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகிய அதேவேளை, Saint – Germain – en – laye பகுதியில் 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்; திரு. ஜோசெப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் பகுதிக்கு முக்கிய பிரமுகர்கள, மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் துயிலும் இல்லப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து, மணி ஒலிக்கப்பட்டது. மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 1991 ஆம் ஆண்டு நாகர்கோயில் பகுதியில் வீரச்சாவடைந்த சின்னவீரனின் தாயார் ஏற்றிவைத்தார்.
அடுத்து 2000 ஆம் ஆண்டு பருத்தித்துறைப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப் . தமிழ்முதல்வனின் தாயார் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செய்தனர்.[caption id="attachment_9111" align="aligncenter" width="640"]IF IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், பொதுமக்கள் அணிவகுத்து மாவீரர்களுக்கு கண்ணீர் காணிக்கையோடு சுடர்ஏற்றினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மாவீரர் நினைவு சுமந்த பேச்சுக்கள், எழுச்சி நடனங்கள்;, பாடல், என்பன அரங்கை அலங்கரித்திருந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர்; சுரேஸ் அவர்களின் மனித நேயம் தொடர்பான உரையும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரின் ‘களம் கண்டி” என்னும் சிறப்பு நாடகம் அனைவரையும் சிந்திக்கவைப்பதாய் அமைந்திருந்தது.
நிகழ்வில் சிறப்புரையை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் திரு. கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்த்தியிருந்தார். அவருடைய உரை இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்களின் உரையும் மேடையை அலங்கரிக்கத் தவறவில்லை.
தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

IF
IF

IF
IF
IF
IF
IF
IF
IF
IF

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.
இம்முறை பாரிசில் வழமைக்கு மாறான நிலைமை இருக்கின்றபோதிலும் மக்கள் அலையெனத் திரண்டு தமது உணர்வெழுச்சியைக் காட்டத் தவறவில்லை. இதேவேளை, பிரான்சு மாவீரர் நாளுக்கு மக்கள் எழுச்சியைக் குறைப்பதற்கு சிறிலங்காவின் கைக்கூலிகள் பிரயத்தனம் எடுத்து, மாவீரர் நாள் இம்முறை நடைபெறாது என பொய்யுரையைப் பரப்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களின் வஞ்சகத்தைத் தகர்த்தெறிந்து மக்கள் தமது உணர்வினை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதனைப் பொறுக்காத இவர்கள,; சிறிலங்கா அரசின் ஊதுகுழல் ஊடகத்தில் எமது மாவீரர் தினத்தை கொச்சைப்படுத்துவதற்காக, எமது மாவீரர் நாள் ஆரம்ப காணொளியுடன் தமது 2011 ஆம் ஆண்டு மாவீரர் நாள் புகைப்படங்களை இணைத்து வெளியிட்டு மக்களை ஏமாற்றி, தமது ஆதங்கத்தைத் தீர்த்துள்ளமை கண்டிக்கத்தக்கது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு

IF
IF

IF
IF
IF
IF

IMG_7172

IMG_7187

IMG_7192

IMG_7199

IMG_7205

IMG_7207

IMG_7223

IMG_7225

IMG_7228

IMG_7230

IMG_7231

IMG_7233

IMG_7237

IMG_7247

IMG_7262

IMG_7283

IMG_7297

IMG_7320

IMG_7338

IMG_7345

IMG_7352

IMG_7358

IMG_7361

IMG_7369

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here