சாந்தனின் புகழுடல் ஊர்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது.
வவுனியாவில் இன்றைய ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.