ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து, சிறையிலிருந்து விடுதலையாகி பின்னர் தமிழ்நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த சாந்தனுக்குகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படும் சாந்தனின் உடலுக்கு வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பல இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடந்து வருகிறது.
சாந்தனின் உடல் கிளிநொச்சியை வந்தடைந்ததும், ஏ9 வீதியிலிருந்து மக்கள் அணிவகுப்புடன், கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்விடத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.பின்னர், மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.