தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை துணைநிற்ப்பவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர்மணி அவர்களும் அவருடன் தமிழீழ உணர்வாளருமான திலீபன் அவர்களும் நடைபெறப்போகின்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று நண்பகல் 13.00 மணி அளவில் சுவிஸ் சூரிச்விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
திரு.கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணாமித்தபோது தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சித்தளத்தை ஆரம்பிப்பதற்காக தனது பண்னை நிலத்தை வழங்கிய ஈழ உணர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் அவரது தேசியப் பற்றுதியையும் நேசித்தவரும் ஆவார் .
பல போராட்ட இயக்கங்கள் தமிழ்நாட்டில் செயற்பட்ட போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் சிறந்த கொள்கையுடைய தேசிய விடுதலை இயக்கமாக தேர்ந்தெடுத்து பல்வேறு உதவிகளை வழங்கினார். பல போராளிகளை தனது பராமரிப்பில் தங்கவைத்து எமது போராட்டத்தை ஆரம்பகாலத்திலிருந்து இன்று வரை அதே உணர்வுடன் வளர்த்து வருகின்றார்.
எந்த நிலை வந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது இலக்கை எட்டும் வரை தொடர்து போராடவேண்டும் என்பதில் தளராத உறுதியுடன் செயற்பட்டுவரு திரு. கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் தற்போது புலம் பெயர்ந்த மக்களை சந்தித்து ஈழஉணர்வை பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
சுவிஸ்தமிழர்ஒருங்கிணைப்புக்குழு.