சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (29.02.2024) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் 100 கிலோ மீற்றர்களை கடந்து பேர்ண் மாநிலத்தின் எல்லையில் நிறைவுற்றது.
இன்றைய நாள் (01.03.2024) பேர்ண் மாநிலத்தின் எல்லையில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் பேர்ண் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கையளித்து மற்றும் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் பிறிபேர்க் மாநிலத்தில் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.