15 நாளாக 29/02/2024 தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்  சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது.

0
85

கடந்த 15/02/2024 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2021 தை மாதம் ஐக்கிய நாடுகள் அவையின்  மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மதிபிற்குரிய பசுலேட்  அம்மையார் அவர்கள் கூறப்பட்ட கருத்திற்கு “ தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும்”  இக் கருத்தை  இக் கூட்டத் தொடரில் நடைமுறைப் படுத்த வலுச்சேர்க்க அனைத்து தமிழ் உறவுகளும் போராட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் போராட்டங்கள் இந்தக் கோரிக்கையில் ஒரு சேர் புள்ளியில் சந்திக்க வேண்டும். அவை எமக்கான இலக்கான “சுதந்திர தமிழீழமும் , சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொண்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே..  ICC ஆகும்.

சர்வதேச ஊடகங்களும் முக்கிய அரசியல் மையங்களும்  தமிழர்களின் நீதிக்கான போராட்டங்களில் கவனம் செலுத்தும்  இவ்வேளை எந்தத் திரிபும் விட்டுக்கொடுப்பும் இன்றி நாம் போராட வேண்டும். அதன் அடிப்படையே 28வது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.  10ம்  நாளாக 25/02/2024 தொடர்ந்து பிரான்சு நாட்டின் எல்லையினை மிக எழுச்சிகரமாக வந்தடைந்தது.

பிரான்சில் சிற்றிகைம், ஐரோப்பிய பாராளுமன்றம், செலாட்சாட்,கொல்மார், வித்தனைம்,  முல்கவுசு, சான் லூயி, நகரசபைகளிலும்  தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது,

ஐக்கிய நாடுகள் அவையிலும் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பல்லின வாழ் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்களான தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.   அதற்கேற்ப நாமும் எமது அறவழிப்போராட்டங்களாலேயே எம்முடைய நியாயமான கோரிக்கையினை செவிமடுக்க வைக்கமுடியும்.

அறவழி ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை சிற்றிகைம், ஐரோப்பிய பாராளுமன்றம், செலாட்சாட்,கொல்மார், வித்தனைம்,  முல்கவுசு, சான் லூயி,    நகரசபைகளில் முதல்வர்கள், மேற்சபை உறுப்பினர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம் சுமந்து  வந்த நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை பதிவுசெய்து தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.

எமது அறவழிப் போராட்டத்தை பாராட்டி மாநகர சபையின் இலச்சினை பதித்த நினைவுப்பரிசுகள் அறவழிப்  போராளிகளுக்கு வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் திங்கட் கிழமை 04/03/2024 திகதி அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

சவால்கள் வழி நெடுகிலும் இருப்பினும் உடல் உபாதைகள் தாங்கி விடுதலைச் செய்தியினை விட்டுக்கொடுப்பின்றி இடித்துரைக்கப்படுகின்றது இப்போராட்டம் மூலமாக.  55வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் அறிந்த எம் உறவுளே, உங்கள் நாடுகளில் இந்தப் போராட்டம் பயணிக்கையில் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள். இது காலத்தின் கட்டாயம்.

“எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்”

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here