பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பு 13 ஆவது தடவையாக நடாத்தம் வன்னிமயில் விருதுக்கான நடனப்போட்டி 21.02.2024 புதன்கிழமை பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றான புளோமினல் என்னும் இடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி. நி. முகுந்தி அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈகைச்சுடர் ஏற்றி வைக்க மலர் வணக்கமும் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்வு 21 ஆம் நாள், 22, 23,24,25 ஆம் (5) நாட்களில் புளோமினல் டுநு டீடயnஉ-ஆநளnடை என்னும் இதே இடத்திலும் தெரிவுப்போட்டிகளும், சில பிரிவுகளுக்குமான இறுதிப்போட்டிகளும், வன்னிமயில் விருதுக்கான போட்டி 09.03.2024 சனிக்கிழமை செவனிலூத்தொம் Savigny- le temple என்னும் ( 77 மாவட்டத்தில் ) பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
2024 வன்னிமயில் போட்டியில் பாலர்பிரிவு முதல் சிறப்புப்பிரிவு என 07 பிரிவுகளுக்கான போட்டிகள் இடம் பெறவுள்ளது. இப்போட்டியில் 680 வரையிலான நடனப்போட்டியாளர்கள் பங்கு கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பெரும் நடனநிகழ்விற்கு கலைபண்பாட்டுக்கழகம், தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பு, இளையோர் அமைப்பினர், தமிழ்ச்சங்கங்கள், தமிழ்ச்சோலைகள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏனைய கட்டமைப்புகளும் தமது ஒத்துழைப்புக்களை நல்கிவருகின்றனர். ஆரம்ப நிகழ்வான இன்று குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.