மன்னாரில் உயிரிழந்த 10 வயது சிறுமி; உதவியதால் உயிர் பறிபோன அவலம்!

0
69

தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார் .

இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் சந்தேக நபருக்கு உணவு வழங்கிய நிலையில் சந்தேகநபரும் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். உணவு கொடுத்த பெண்மணியின் மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகளின் 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, பிரதேசவாசிகள் இணைந்து சிறுமிய தேடியுள்ளனர்.

காவலாளி சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தாக அயவலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய , பிரதேச இளைஞர்கள் காவலாளியிடம் விசாரணை செய்தனர். எனினும் தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென கூறினார். இளஞர்கள் சிறுமியை தேடுவதில் ஈடுபட காவலாளி வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.

இதையடுத்து காவலாளி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளிக்கு , தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர். தகவலறிந்து பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர். பொலிஸார் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது சிறுமியின் பின்னால் காவலாளி செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன. அதோடு சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.

இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் சந்தேக நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சந்தேநபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அதேசமயம் சந்தேக நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சந்தேநபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here