2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின் நினைவெழிச்சி நாளானது 12.02.2024 அன்று Langstraat 102 Antwerpen 2140 என்னும் இடத்தில் அமைந்த மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவு கூறப்பட்டது.
முதன்மையாக ஈகையர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டத்து . அகவணக்கத்தைத்தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகளான தாயகப்பாடல்கள் ,கவிதைகள்,எழுச்சி நடனம்,பேச்சு என்பன இடம்பெற்று இறுதியில் எமது தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.