பிரான்சில் உச்சம் பெறும் தமிழியல்!

0
272

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டப்படிப்பிற்கான தேர்வின் இறுதி
நாளான 11/02/2024 இல் பட்டக்கல்வியை நிறைவு செய்த பட்டகர்களுக்கான சிறப்பு நிகழ்வு
ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் 
1. ரிஜிதா பத்மநாதன்   
ஆசிரியர்  Val d’Europe தமிழ்ச்சோலை  
2. இராசகிளி இளவரசன்   
ஆசிரியர் Chelles  தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
3. தம்பிப்பிள்ளை ஜெதுர்ஷா  
La Courneuve தமிழ்ச்சோலை பழைய மாணவர்   
4. துஸ்யந்தன் இயல்வாணி  
Le Blanc-Mesnil  தமிழ்ச்சோலை பழைய மாணவர்   
5. நிரூஜா உலகநாதன்   
Neuilly sur Marne  தமிழ்ச்சோலை பழைய மாணவரும் தற்போது அதே தமிழ்ச்சோலை
ஆசிரியரும் 
6. முருகதாஸ் ஜதுர்ஷ்னா  
La Courneuve தமிழ்ச்சோலை பழைய மாணவரும் தற்போது அதே தமிழ்ச்சோலை ஆசிரியரும் 
7 .சிமியோன் ஆன்-சோபி 
Sevran தமிழ்ச்சோலை  பழைய மாணவர்     
8. உபைத்துல்லா பாத்திமா ஹிமாஸா   
Paris 17 தமிழ்ச்சோல பழைய மாணவர்   
9. தட்சாயினி மனோகரன்  
Paris 20 தமிழ்ச்சோலை பழைய மாணவர்   
10. அருளானந்தம் ஜெகதீஸ்வரி   
 Le Blanc-Mesnil தமிழ்ச்சோலை 
11. கேதீஸ்வரன் நிறைந்தசெல்வி   
 Creteil தமிழ்ச்சங்கப் பொருளாளர் 
12. ஸ்ரீசோபன்  வாசுகி தமிழாசிரியர் 

 ஆகியோரே மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். அவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில்
மதிப்பளிக்கப்பட்டனர். 

தேர்வு முடித்து
வெளியேறியவர்களில் இராசகிளி இளவரசன்,  தம்பிப்பிள்ளை ஜெதுர்ஷா,
துஸ்யந்தன் இயல்வாணி,  நிரூஜா உலகநாதன், முருகதாஸ் ஜதுர்ஷ்னா, சிமியோன்
ஆன்-சோபி,  உபைத்துல்லா பாத்திமா ஹிமாஸா,  தட்சாயினி மனோகரன் ஆகியோர்
இளையோர்கள், தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 ஐ நிறைவு செய்தவர்கள்
என்பதோடு பிரான்சு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பை
மேற்கொள்பவர்களாவர். 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இத் தமிழியல் பட்டச் சான்றிதழுக்கு,
பிரான்சு அரசால் பட்ட மேற்படிப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிக
எண்ணிக்கையில் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தோற்றி
சாதனை படைத்துள்ளனர்.  


குணராசன் வர்சிகா என்ற மாணவி இணையவழித்தேர்வு பகுதி-1 மற்றும் பகுதி-2
ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு புள்ளிகள் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார். 

ஏனைய மாணவர்களும் சராசரி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் நீஸ் ஆகிய இடங்களில் இருந்தும்

இத்தேர்வுகளுக்குத் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்சான்றிதழ் தேர்வை நிறைவு செய்த மாணவர்கள் :
நாகயோதீஸ்வரன்  பவிஜன்  
இவ்ரி சூர் செய்ன் (IVRY-SUR-SEINE) தமிழ்ச்சோலை பழைய மாணவர் 
 மகேந்திரன் நிலுக்சிகா  
சுவாசி லு றுவா (CHOISY-LE-ROI) தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
 மகேந்திரன் சுதர்சிகா    
சுவாசி லு றுவா (CHOISY-LE-ROI) தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
ஜோய் சுதர்சன் ஜெனித்தா  
செல் (CHELLES) தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
 மகாலிங்கம் அபினயா          
லா கூர்நெவ் (LACOURNEVE) தமிழ்ச்சோலை பழைய மாணவர்   
 ஜெயகாந்தன் அகச்சுரபி        
CTEF PRIVE பழைய மாணவர் 
  இராசகரன் சாருசன்       
சார்சல் (SARCELLES) தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
 றஞ்சன் தீபிகா         
சார்சல் (SARCELLES) தமிழ்ச்சோலை பழைய மாணவர் 
  சாள்ஸ் ஆன் ஆராதனா         
வில்நவ் சென் ஜோர்ஜ் (VILLENEUVE SAINT GEORGES) தமிழ்ச்சோலை பழைய
மாணவர்  

 மகேஸ்வரன் பிரியதர்சினி  
ஒல்னே சூ புவா (AULNAY SOUS BOIS 2) தமிழ்ச்சோலை பழைய மாணவர்  
 தயாபரன் மௌலீசன்    
லு  புளோ மெனில் (LE BLANC MESNIL) தமிழ்ச்சோலை பழைய மாணவர் 
நேமிநாதன் காவேரி      
CTEF PRIVE பழைய மாணவர் 
செல்வவரோதயம் ரஜினி     
நிர்வாகி, நொய்சி சாம்ப் (NOISY-CHAMPS) தமிழ்ச்சோலை 
குணராசன் வர்சிகா
தனித்தேர்வர்
ஆறுமுகம் மதுஷா
தனித்தேர்வர்
மைக்கல் ஜெயராஜ் றொனால்டோ
தனித்தேர்வர்
ஜமீலன் தர்மினி
தனித்தேர்வர்
தமிழியல் பட்டச் சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக
(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le
grade de licence (bac +3)
பிரான்சில் பிறந்த முதலாம் ஆண்டு பட்டயக் கல்வி மாணவன் நிதுஷன் சந்திரலிங்கம்
நிகழ்வை தொகுத்து வழங்கியிருந்தார். 
பட்டக்கல்விக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை பங்குனி 30 ஆம் திகதி வரை
ஏற்றுக்கொள்ளப்படுமென தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

ReplyForwardAdd reaction

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here