பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு இன்று 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை La Chapelle பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.