லூபுசே நகரத்தின் மாநகர முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்மக்கள்!

0
117

பிரான்சில் தமிழ்மக்கள் அதிகம் வாழும் நகரத்தில் ஒன்றான லூபுசே நகரத்தின் மாநகர முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் தமிழர்களும் கலந்து கொண்டதோடு தமது வாழ்த்துக்களையும் முதல்வருக்கு நேரடியாக தெரிவிப்பு.

கடந்த 21.01.2024 நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தல நடைபெற்று 56 வீத வாக்குகளைப் பெற்ற மாநகர முதல்வர் Jean Baptiste BORSALI அவர்களுக்கான பதவி ஏற்பும், அவருடனான ஏனைய நிர்வாக துணை முதல்வர்களுக்குமான பதவியேற்பு நிகழ்வு 03.02.2024 காலை  09.00 மணிக்கு மாநகரத்திற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து மாநகர உறுப்பினர்களின் வாக்குகள் பெறப்பட்டது. அதன் பிரகாரம் முதல்வரை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் முன்னாள் புளோமினல் மாநகர முதல்வரும் தற்போது சபாநாயகராக இருக்கு தியேற்றி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார். அதன்பின் பதவியேற்ற முதல்வர் ஏனையவர்களுக்கு பதவியையும் அதற்கான அங்கீரத்தையும் செய்திருந்தார்.

இன்றைய நிகழ்வில் தமிழினத்தின் ஆதரவாளர், பற்றாளனாக இருந்து வரும் மதிப்புக்குரிய லூபுசே மாநகர முதல்வர் Jean Baptiste BORSALI அவர்களை தமிழர் தரப்பால் தமிழ்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன்> லாக்கூர்னேவ் மற்றும் 93 மாவட்ட மாநகர சபை ஆலோசகர் செல்வி. சுகுணா மற்றும் லூபுசே பிராங்கோ தமிழ்சங்க தலைவர்> நிர்வாக உறுப்பினர்கள்> நகரமக்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் நேரடியாகச் சென்று மலர் கொத்துக்கள் வழங்கி தமது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here