முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று (02-02-2024) குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அவர் இன்று முற்பகல் சென்றிருந்தார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டிருந்தார். அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.