பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(01.02.2024) பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
செயல் நோக்குகள்
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்துரைத்துள்ளார். மேலும், அவரது அடுத்த கட்ட செயல்நோக்குகள் குறித்து கேட்டறிந்ததோடு, ஈழத்தமிழர்களின் அரசியல் களத்தில் தாம் கொண்டிருக்கும் கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.