குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பழங்களை பிரான்ஸ் இனி இறக்குமதி செய்யாது என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பழங்களுக்குத் தடை
“Thiacloprid” என்னும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்குத் தடை விதிக்க பிரான்ஸ் திட்டமிட்டுவருவதாக பிரான்சின் புதிய பிரதமரான கேப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.
பிரான்சிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரித்த அவர், உணவு இறையாண்மையின் கொள்கைகளை பிரான்ஸ் சட்டமாக்கும் என்று கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் உணவுகள் மீதான சோதனைகளை பிரான்ஸ் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்த கேப்ரியல், குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களில், பிரான்சிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.