16.01.1993 அன்று தாயகம் நோக்கி எம்.விஅகத் என்னும் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்திய அரசின் நய வஞ்சகத்துரோகத்தினால் வங்கக்கடலில் காவியமான தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் நினைவெழுச்சி நாளானது 22.01.2024 அன்று florallenlaan 288,berchem 2600 Belgium என்னும் இடத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறையில் சிறப்பான முறையில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
மாலை 4.00 மணிக்கு கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டது . தொடர்ந்து தாயகப்பாடல் ,கவிதை என்பன இடம் பெற்ற பின்னர் மாலை 5.00 மணிக்கு எமது தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.