பிரான்சு மாவீரர் தினத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருந்த திராவிட விடுதலைக் கழகத் தலைவரும் தமிழின உணர்வாளருமாள திரு. கொளத்தூர் மணி அவர்கள் நேற்று புதன்கிழமை பந்தன் பகுதியில் உள்ள கேணல் பரிதி, கப்டன் கஜன், லெப் கேணல் நாதன் ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்றிருந்தார். அங்கு இருந்துகொண்டு மாவீரர் தினத்தில் அலையெனத் திரண்டு கலந்துகொள்ளுமாறு உலகெங்கும் வாழ். தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு பிரான்சு விமான நிலையத்திற்கு வருகைதந்த கொளத்தூர் மணி அவர்களை பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உபகட்டமைப்புப் பிரதிநிதிகளும் காத்திருந்து தமிழீழத் தேசியக் கொடி தாங்கி வரவேற்றனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் கொளத்தூர் மணிஅவர்களை பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தார்.