இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் மண் கவ்வினார் சுமந்திரன்!

0
66

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எண்மர் செயற்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்கள் வாக்களித்தனர்.

அதன்படி, இன்று 21 ஆம் திகதி ததிருகோணமலை நகரமண்டபத்தில் இடம் பெற்ற வாக்களிப்பில் 327 பேர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர்.

எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது.

இந்நிலையில் அண்மைய நாட்களில் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமைக்கு போட்டியிடும் சக வேட்பாளரான சிறீதரனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதன் காரணமாக சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  சீனித்தம்பி யோகேஸ்வரனும் தனது வாக்கை சிறிதரனுக்கு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here