பிரான்சில் மாவீரர் தினத்தன்று கடற்புலி மாவீரர்களுக்கு விசேட படகில் வைத்து சுடர்ஏற்றப்படவுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக பந்தனில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு முன்பாக சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும் அதேவேளை, மண்டப நிகழ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து கடற்புலி மாவீரர்களுக்கான நிகழ்வும் குறித்த ஒரு பகுதியில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட படகில் வைத்து சுடர் ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் விசேட படகில்வைத்து கடற்புலி மாவீரர்களுக்கான சுடர் ஏற்றப்படவுள்ளது!