பிரான்சில் தைத்திருநாள் தைப்பொங்கல் விழா! 

0
218

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பிரான்சில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான லாக்கூர்நேவ் பிரதேசத்தில் இடம்பெற்றது. 20.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு  தமிழர் பண்பாட்டு இசையான பறை முழங்க பொங்கல் பானை வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிராங்கோ தமிழ்ச்சங்கம் லாக்கூர்நேவ், லாக்கூர்நேவ் வர்த்தகர்கள், மாநகரசபையும் இணைந்து இம்மாநகரத்தின் முக்கிய மையத்தில் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெரியவர்கள் முதல் இளையவர்கள் தமிழர் பண்பாட்டு உடையணிந்து, கோலமிட்டு தோரணம், மாலைகட்டி பொங்கல் பொங்கும் போது இங்கு பிறந்து வளர்ந்து வரும் இளங்கலைக்குழந்தைகள் பாறைவாத்தியத்தை வாசித்து அனைத்து வெளிநாட்டு மக்களையும் உள்வாங்கிக்கொண்டு கவயீர்ப்பும் செய்திருந்தனர்.

அதன் பின்னர் பிரதியேகமான மண்டபத்தில் பொங்கல் பாடல்கள் , கிராமிய நடனங்கள், தமிழீழப்பாடல்கள், கோலாட்டம், உழவர் நடனம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன. கலைபண்பாட்டுக்கழகத்தின் விலைபோகா வீரம், இறுவெட்டும், இரத்த நிலம் நூல் வெளியீடுகளும் இடம் பெற்றன. விலைபோக வீரம் பாடகர்கள் மேடையில் மாநகர முக்கியஸ்தகர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மாநகர முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதோடு தமிழர்களின் என்று மாறாது பல்லாண்டு காலம் கடந்தும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது கண்டு தாம் வியப்பும் பெருமையும் அடைவதாகவும் இந்த தமிழ்இனம் எங்களுடன் வாழுவது பெருமையாகவும் உள்ளது என்றும், இதனை பல்வேறு வழிகளில் முன்னெடுத்துச் செல்லும் அதன் கட்டமைப்புக்களை வாழ்த்துவதாகவும் அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக தாம் இருப்பதாவும் தெரிவித்திருந்தனர். காலை ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு இரவு 7.00 மணிவரை நடைபெற்றது. வந்திருந்த மக்களுக்கு பொங்கல் மற்றும் சிற்றுண்டிகளை தமிழ்ச்சங்கத்தினர் வழங்கியிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here