ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!
வலி கொண்ட இனத்தின்
விடிவிற்காக – வரிப்புலி சுமந்து
வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று
வீரப் போர் புரிந்து….
வீரமரணம் அடைந்த பின்பும்…
தனது உடல் விதையாகிப் போக…
தன் உடல் சுமந்த
வரிப் புலிச் சீருடையின்
ஒற்றைப் பகுதியை…
வீரத்தின் அடையாளமாய்
விட்டுச் சென்றுள்ளான்.!!
ஆறாண்டுகள் போன பின்பும்…
மங்கிப் போகாத பொலிவுடன்
யுத்தத்தின் காயங்களை சுமந்தவாறு
ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
அமைதியாக…
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!
“விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.!!
இலட்சிய வீரர்கள் இறப்பதுமில்லை!!!”
– வல்வை அகலினியன்