ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துள்ளார்.
அத்துடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை இன்று காலை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை பிற்பகல் நாட்டை வந்த அவர், இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் நேற்று சனிக்கிழமை மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் இந்த விஜயத்தின் போது சமந்தா பவர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டோர், உள்ளூர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் அவர் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.