பாரிஸில் புதனன்று பொலிஸ் தேடுதலின்போது குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட பெண் மற்றும் கும்பல் பாரிஸின் வர்த்தக பகுதியில் மற்றொரு தாக்குதலை நட த்த சதி செய்தவர்கள் என்று தெரியவந்துள் ளது. பிரான்ஸ் தலைநகரில் 129 பேரை பலி கொண்ட தாக்குதல்களுக்கு அடுத்த தினத்தில் இந்த தாக்குதலை நடத்த சதி இருந்துள்ளது.
கடந்த புதனன்று சூரியோதயத்திற்கு முன் னர் பாரிஸ் புறநகர் பகுதியான சென் டெனி ஸில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றை சோதனையிட முயன்றபோதே அங்கு மோதல் வெடித்தது. பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல் களுக்கு மூளையாக செயற்பட்டதாக நம்பப்ப டும் அப்தல் ஹமீத் அபாவுத் என்பவரை தேடியே இந்த சோதனை நடத்தப்பட்டது.
பாதுகாப்பு படையினர் கட்டடத்திற்குள் நுழை ந்தபோது குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சண்டையும் ஏற்பட்டன. எட்டு சந்தேக நபர் கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த மோதலில் கொல்லப்பட்டது இருவரா அல்லது மூவரா என்பது குறித்து உறுதி செய்ய தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் குறித்த கட்டடத்திற்குள் பொலிஸார் 5000 சுற்று தோட்டாக்களை பிரயோகித்திருப்பதாக பாரிஸ் அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கட்டடம் சின்னாபின்மாகி இருப்பதோடு அதன் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
இதில் தற்கொலை குண்டு தாக்குதலை நட த்தி இருக்கும் பெண் அபாவுதின் மைத்துனி யாக இருக்கலாம் என்று புலன்விசாரணையா ளர்களை மேற்கோள் காட்டி வொ’pங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் கொல்லப்பட்ட சடலங்கள் இன் னும் அடையாளம் காணப்படவில்லை என்று அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய் யப்பட்டவர்களில் அபாவுத் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புலன் விசாரணையில் பங்கேற்றிருக் கும் பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி ராய் ட்டர் வெளியிட்டிருக்கும் செய்தியில், மேற்படி குழுவினர் புதிதாக தாக்குதல் ஒன்றுக்கு சதி செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதில் பாரிஸின் உயர் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங் கள் இருக்கும் பகுதியிலேயே இந்த தாக்கு தலை நடத்த சதி செய்யப்பட்டிருப்பதாக நம் பப்படுகிறது.
மறுபுறம் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு ஆதரவானவர்கள் பிரான்ஸில் யூத ஆசிரியர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நட த்தியுள்ளனர்.
தெற்கு பிரான்ஸின் துறைமுக நகரான மர்சைலஸில் மூன்று ஐ.எஸ். ஆதரவாளர்களே குறித்த ஆசியரியர் மீது கத்திக்குத்து நடத்தியுள்ளனர். எனினும் அந்த ஆசிரியரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸ் தீவிரவாதிகளின் இரசாயன அல்லது உயிரியல் தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக பிரான்ஸ் பிரதமர் மானுவல் வோல்ஸ் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர் அவசரகால நிலையை நீடிப்பது குறித்து எம்.பிக்கள் பாராளுமன்றத் தில் நேற்று விவாதித்தனர்.
அவசரகால நிலையை முன்று மாதங்களு க்கு நீடிப்பது குறித்த விவாதத்தில் உரையா ற்றிய வோல்ஸ், “தீவிரவாதிகள் பிரான்ஸை தாக்கியது சிரியா மற்றும் ஈராக்கில் முன்னெ டுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாத்திரமல்ல. அது தாக்கப்பட வேண்டியதாகவே முன்னெ டுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.