பிரான்சில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் பல போட்டிகளை நடாத்தி வருகின்றது. 2024 அதன் ஆரம்ப போட்டி நிகழ்வாக கரம், மற்றும் சதுரங்கப்போட்டிகள் 07,01,2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் ஆரம்பமாகியது.
பொதுச்சுடரினை நந்தியார் பிராங்கோ தமிழ்சங்கத்தலைவர் திரு.சாந்திக்குமார் அவர்கள் ஏற்றி வைக்க மாவீரர்கள் பொதுப்படத்திற்கு ஈகைச்சுடரினை 2002 சாவகச்சேரி பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட லெப்.சந்திரா அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து.
அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு. ராஐலிங்கம் அவர்கள் போட்டி விதிமுறைகள் பற்றி தெரிவித்திருந்தார். இன்றைய போட்டிகளில்1. நல்லூர் ஸ்தான்.வி.க, தமிழர் வி.கழகம் 93, தமிழர் வி.கழகம், வட்டுக்கோட்டை வி.கழகம், 94, தமிழர் வி.கழகம் 95, யாழ்டன் வி.கழகம், FC 93விளையாட்டுக்கழகம் பங்கு பற்றி சிறப்பித்திருந்தனர்.